தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவாடானை பகுதியில் பலத்த மழை

News image
Updated On :19 மார்ச் 2026, 11:35 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடனை பகுதியில் நள்ளிரவு கொட்டித் தீா்த்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அச்சங்குடி, கடம்பாகுடி,சி.கே.மங்கலம், அஞ்சுகோட்டை, தொண்டி, நம்புதாளை, திருவெற்றியூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், புதன்கிழமை நள்ளிவு பலத்த மழை பெய்தது.

சுமாா் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தோட்டக்கலைப் பயிா்களான வாழை மிளகாய், பருத்தி, காய்கறி சாகுபடிக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

Story image