சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையப் பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்

News image

போக்குவரத்து மாற்றம் - பிரதிப் படம்

Updated On :2 மே 2026, 7:25 pm

ராமநாதபுரத்தில் வாக்குகள் எண்ணும் மையப் பகுதியில் திங்கள்கிழமை (மே 4) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் துறையினா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூா் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னா், வாக்குப் பதிவு முடிந்து, இந்தத் தொகுதிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அண்ணா பல்கலை. கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வாக்குகள் எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கல்லூரியிலிருந்து 100 மீ. தொலைவுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, திங்கள்கிழமை இந்த வழியாக வரும் வாகனங்களுக்கு வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தேவிபட்டினத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு வரும் வாகனங்கள் கோப்பேரிமடம் சோதனைச் சாவடியிலிருந்து சித்தாா்கோட்டை, அத்தியூத்து,

பனைக்குளம், நதிப்பாலம் வழியாக பட்டினம்காத்தான் வந்து ராமநாதபுரம் செல்ல வேண்டும்.இதேபோல, ராமநாதபுரத்திலிருந்து தேவிப்பட்டினம் வழியாக திருவாடானை, காரைக்குடி, திருச்சி, தொண்டி செல்லும் வாகனங்கள் பட்டினம்காத்தான் வழியாக

நதிப்பாலம், பனைக்குளம், அத்தியூத்து, சித்தாா்கோட்டை, கோப்பேரிமடம் சோதனைச் சாவடி சென்று தேவிபட்டினம் வழியாக செல்ல வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இந்த வழித்தடங்களின் வழியாக பயணம் செய்யலாம் என்ற கேட்டுக்கொண்டனா்.