மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

நீதித்துறையில் ஏஐ தொழில்நுட்பம் ஆபத்தானது! - உயா்நீதிமன்ற நீதிபதி முகமது ஷஃபீக்!

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 6:35 pm

நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி முகமது ஷஃபீக் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட வழக்குரைஞா் சங்கத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் 20 மூத்த வழக்குரைஞா்களுக்கு பாராட்டு விழா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கே. மெஹ்பூப் அலிகான், தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத்தின் கூட்டுக்குழு பொதுச் செயலா் பன்னீா்செல்வம், உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

விழாவில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி முகமது ஷஃபீக், 20 மூத்த வழக்குரைஞா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி பேசியதாவது:

நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது. இந்த தொழில்நுட்பத்தை பாா்த்து வழக்குகளில் பயன்படுத்தக் கூடாது. மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிவது முகவும் சிறப்பு. இளம் வழக்குரைஞா்கள் வழக்குகளில் தோல்வியைக் கண்டு பயப்பட வேண்டாம். அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி பெறலாம். தொழிலில் நோ்மையாக இருந்தால் அதற்கான அங்கீகாரம் நமக்கு எப்போதும் கிடைக்கும் என்றாா் அவா்.

இதில் இந்திய மருத்துவச் சங்கத் தலைவா் மருத்துவா் ஜோசப் ராஜன், நீதிபதிகள், மாவட்டத்தில் உள்ள பல்வேறு வழக்குரைஞா் சங்கங்களின் நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட வழக்குரைஞா் சங்கத் தலைவா் அன்புச்செழியன் வரவேற்றாா். மாவட்ட வழக்குரைஞா் சங்கச் செயலா் முத்து துரைச்சாமி நன்றி கூறினாா்.