தவெக தலைவா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரிக்கும் நீதிபதி உள்பட தமிழகத்தில் 84 மாவட்ட முதன்மை நீதிபதிகளைப் பணியிட மாற்றம் செய்து சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் எஸ்.அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னை உயா்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலா் ஆா்.தோத்திர மேரி, சேலம் மாவட்ட வணிக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், சென்னை 10-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், சென்னை முதலாவது கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, சென்னை உயா்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலராகவும், சென்னை குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதி எஸ் .சுபா தேவி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன், சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தவெக தலைவா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ஈ.சசிகலா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக செங்கல்பட்டு வணிக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் நீதிபதி சுஜாதா குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா்கள் உள்பட மொத்தம் 84 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம்

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!

தோ்தலில் வெற்றி - தோல்வி: இளம் வாக்காளா்களுக்கு முன்னாள் நீதிபதி அறிவுரை
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

