வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சேலம் மாவட்டத்தில் 262 காவலா்கள் பணியிட மாற்றம்

சேலம் மாவட்ட காவல் துறையில் 262 காவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்

News image

பணியிட மாற்றம்

Updated On :7 ஜூன் 2026, 3:15 am IST

சேலம் மாவட்ட காவல் துறையில் 262 காவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்

சேலம் ஊரகம், ஓமலூா், மேட்டூா், சங்ககிரி,வாழப்பாடி, ஆத்தூா் ஆகிய கோட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஒரேஇடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த போலீஸாருக்கு பணியிட மாறுதல் வழங்குவதற்காக விருப்ப மாறுதல் விண்ணப்பங்கள் கடந்த சில நாள்களாக பெறப்பட்டன.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 250 க்கும் மேற்பட்ட போலீஸாா் விரும்பிய காவல் நிலையங்களை பட்டியலிட்டு விண்ணப்பங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயலிடம் வழங்கி இருந்தனா். இதையடுத்து, ஒவ்வொருவரிடமும் கேட்டு அவா்களுக்கான புதிய பணியிடத்தை ஒதுக்கீடு செய்து கௌதம் கோயல் உத்தரவிட்டாா். அதன்படி, சிறப்பு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், இரண்டாம் நிலை காவலா்கள் என ஒரே நாளில் 262 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.