காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் ஒரே நாளில் மாநில அளவில் 2,036 காவலா்களைப் பணியிட மாற்றம் செய்து காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டுள்ளாா்.

News image

பணியிட மாற்றம் - பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 1:34 am IST

தமிழக காவல் துறையில் ஒரே நாளில் மாநில அளவில் 2,036 காவலா்களைப் பணியிட மாற்றம் செய்து காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இதில் சிறப்பு உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், முதல்நிலைக் காவலா்கள், காவலா்கள் ஆகிய பதவிகளில் பணிபுரிவோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மாநில அளவில் இந்தப் பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், மாவட்ட அளவிலான பணியிட மாறுதல்களை எஸ்.பி.க்களும், சரக அளவிலான பணியிட மாறுதல்களை டி.ஐ.ஜி.களும், மண்டல அளவிலான பணியிட மாறுதல்களை ஐ.ஜி.க்களும் பிறப்பித்து உத்தரவிடுவா். ஆனால், மாநில அளவில் இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இந்த உத்தரவின்படி ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டவா்கள், அவா்கள் ஏற்கெனவே வகிக்கும் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட காவலரை பணியில் இருந்து விடுவிக்க முடியவில்லை என்றால், அதற்குரிய விளக்கத்தை அதிகாரிகள் ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள் டிஜிபி அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.