ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் காலோன் தலைமையில் புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. கடந்த 4-ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி தொடங்கி நிறைவடைந்தது.
இந்த நிலையில், பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூா், ராமநாதபுரம் ஆகிய 4 பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டுவரப்பட்டன. பின்னா், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் முன்னிலையிலும், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையிலும், அந்த அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சங்கர நாராயணன், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைப்பு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் இருப்புவைப்பு

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

