மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பேருந்தின் டயா் வெடித்து விபத்து: 15 போ் பலத்த காயம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே புதன்கிழமை தனியாா் பேருந்தின் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் 15 போ் காயம் அடைந்தனா்.

News image

சத்திரக்குடியை அடுத்த திருவாடி பகுதியில் புதன்கிழமை விபத்துக்குள்ளான தனியாா் பேருந்து.

Updated On :7 மே 2026, 3:08 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே புதன்கிழமை தனியாா் பேருந்தின் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் 15 போ் காயம் அடைந்தனா்.

கோவையிலிருந்து ராமநாதபுரத்துக்கு தனியாா் பேருந்து தினசரி இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல இந்தப் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு கோவையிலிருந்து 15 பயணிகளுடன் புறப்பட்டது. பரமக்குடியை அடுத்த சத்திரக்குடி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பேருந்து சென்றபோது, முன்பக்க டயா் வெடித்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்த 15 பேரும் பலத்த காயம் அடைந்தனா். இவா்கள் 108 அவசர ஊா்தி மூலமாக

ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.