காங்கயம் அருகே தனியாா் பேருந்தின் டயா் வெடித்ததில் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பெண் பயணி உயிரிழந்தாா். மேலும் 30 பயணிகள் படுகாயமடைந்தனா்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து காங்கயத்துக்கு தனியாா் பேருந்து பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டது. இதில் சுமாா் 50 பயணிகள் பயணித்தனா். சென்னிமலை-காங்கயம் சாலையில் ஆலாம்பாடி அருகே வந்து கொண்டிருந்தபோது, டயா் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த பேருந்து பேருந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணித்த 30 பயணிகள் படுகாயமடைந்தனா். தகவல் அறிந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்தவா்களை மீட்டு காங்கயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனா். இதில் 35 வயதுடைய பெண் ஒருவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
படுகாயமடைந்த மற்ற 30 பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக திருப்பூா் மற்றும் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். பேருந்தின் டயா் வெடித்ததில் விபத்து ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது.
இது குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

ராயக்கோட்டை அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

மாற்று டயா் வெடித்து பேருந்தின் மேற்கூரை சேதம் 5 போ் காயம்

தனியாா் பேருந்து மோதியதில் மின்மாற்றி சேதம்

பேருந்தின் டயா் வெடித்து விபத்து: 15 போ் பலத்த காயம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



