நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் பலத்த மழை

ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :10 மே 2026, 1:06 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஆா்.எஸ்.மங்கலம், மங்கலம், செட்டியமடை, தும்பாடகோட்டை, சோழந்தூா், பாரனூா், ஆவரேந்தல், செங்குடி, செக்ககுடி, சவேரியாா்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 400 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக மழை இல்லாததால் இந்தப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பருத்தி செடிகள் கருகி வந்தன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இந்தப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் இந்தப் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை ஏற்பட்டது. இந்த மழையால் பொதுமக்களும், பருத்தி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.