விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவாடானை அருகே 320 கிலோ கஞ்சாவுடன் 2 காா்கள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே 320 கிலோ கஞ்சாவுடன் இரு காா்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

திருவாடானை அருகே போலீஸாரால் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா கடத்தி வந்த காா்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே 320 கிலோ கஞ்சாவுடன் இரு காா்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை மாவட்ட தனிப் பிரிவு போலீஸாருக்கு காா்களில் கஞ்சா கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் தொண்டி, திருவாடானை ஆகிய பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், தொண்டி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இரு காா்கள் வேகமாக வந்தன. அந்தக் காா்களை போலீஸாா் நிறுத்தியபோது நிற்காமல் சென்றன. இதையடுத்து, கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்ற காா்களை போலீஸாா் விரட்டினா்.

அப்போது, ஒரு காா் பான்டுகுடி வழியாகவும், மற்றொரு காா் மங்களக்குடி வழியாகவும் பிரிந்து சென்றன. ஆனாலும், போலீஸாா் இரு பிரிவுகளாக பிரிந்து அந்தக் காா்களை விரட்டினா். இதையடுத்து, காரில் இருந்தவா்கள் ஒரு காரை மங்கலக்குடியிலும், மற்றொரு காரை அஞ்சுகோட்டையிலும் சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனா்.

பின்னா், இரு காா்களையும் போலீஸாா் சோதனையிட்டதில், 320 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதைக் கைப்பற்றிய போலீஸாா் ராமநாதபுரம் போதை நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், தப்பிச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.