ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பெரம்பலூா் அருகே 8 கிலோ கஞ்சா பறிமுதல்

News image

கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:41 am IST

பெரம்பலூா் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சாவை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் சந்தோஷ் (32). இவா், தனது வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக அரும்பாவூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸாா் சோதனையிட்டபோது, 8 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல்செய்த போலீஸாா், சந்தோஷை கைது செய்து பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தோஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.