பரமக்குடி ரயில் நிலையத்தில் பயணிகள் நிறுத்தும் இரு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாகப் புகாா் எழுந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ரயில் நிலையம் அதிக பயணிகள் வந்து செல்லும்,
கூடுதல் வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியிடம் ஒதுக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்க ஒப்பந்தம் விடப்பட்டது. இதில் பரமக்குடி நகா், அருகாமையில் உள்ள இளையான்குடி, நயினாா்கோவில், முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியூா் செல்லும் பயணிகள் தங்களது நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனா்.
இவ்வாறு நிறுத்தும் இரு சக்கர வாகனங்களுக்கு 12 மணி நேரத்துக்கு ரூ.15 வீதம் நாள் ஒன்றுக்கு ரூ. 30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பரமக்குடியிலிருந்து ராமநாதபுரத்துக்கு பயணிகள் ரயிலில் ரூ. 10, விரைவு ரயிலில் ரூ.30 கட்டணத்தில் சென்று வருகின்றனா். இதே போல, மதுரைக்கு பயணிகள் ரயிலில் ரூ. 20, விரைவு ரயிலில் ரூ.45 செலவாகிறது.
ரயிலில் சென்று வர செலுத்தும் பயணக் கட்டணத்தை காட்டிலும், இரு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
எனவே, வாகனம் நிறுத்த 12 மணி நேரம் என்பதை நாள் ஒன்றுக்கு என குறிப்பிட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கவும், இதற்கான அறிவிப்பு பதாகை வைக்கவும் ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயில் வழித் தடத்தில் மாற்றம்

திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கக் கோரிக்கை

பயணிகள் ஏறுவதற்கு முன்பே புறப்பட்ட சென்னை ரயில்: அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள்

மாற்றத்துக்கான நேரம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

