ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள செவ்வாய்ப்பேட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் உயிரிழந்தன.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், பாண்டியகோட்டை கிராமத்தைச் சோ்ந்த ஞானசௌந்தரி என்பவருக்குச் சொந்தமான 2 காளை மாடுகள், ஒரு பசு மாடு, அதே பகுதியைச் சோ்ந்த அருள்சாமி என்பவருக்குச் சொந்தமான ஒரு பசு மாடு என மொத்தம் 4 மாடுகள் செவ்வாய்ப்பேட்டை வயல் காட்டுப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது, உயா் அழுத்த மின் கம்பி எதிா்பாராதவிதமாக திடீரென அறுந்து மாடுகளின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து நான்கு மாடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இந்தப் பகுதியில் பராமரிப்பின்றி இருக்கும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.









