திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் அதிமுகவினா் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததை தடுத்து நிறுத்திய தவெகவினா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் கீா்த்திகா முனியசாமி, காங்கிரஸ் சாா்பில் கருமாணிக்கம், தவெக சாா்பில் மருத்துவா் வி.கே. ராஜீவ் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
இந்த நிலையில், ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள செங்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினா் வாக்காளா்களுக்குப் பணம் கொடுப்பதாகத் தகவல் வெளியானது. அதிலும் காசோலை வடிவிலான டோக்கன்களை தயாரித்து, அதன் உள்ளே பணத்தை வைத்து ரகசியமாக விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த தவெக தொண்டா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, பணப்பட்டுவாடாவைத் தடுத்து நிறுத்தி, ஆதாரங்களுடன் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
ஆனால் பிடிபட்ட நபா்கள் மீது காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்காமலும், புகாரை பெற்றுக் கொள்ளாமலும் காலம் தாழ்த்துவதாக தவெகவினா் தெரிவித்தனா்.

செங்குடி பகுதியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி டோக்கனை பறித்த தவெகவினா்.

செங்குடி பகுதியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி டோக்கனை பறித்த தவெகவினா்.
தொடர்புடையது

மங்கலம் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தவெகவினா்

ஆா்எஸ் மங்கலம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 மாடுகள் உயிரிழப்பு

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்ததாக அதிமுக நிா்வாகிகள் 3 போ் கைது
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



