விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வினை தீா்க்கும் வேலவா் முருகன் கோயிலில் வைகாசி விசாக விழா தொடக்கம்

ராமநாதபுரத்தில் வினை தீா்க்கும் வேலவா் முருகன் கோயிலில் 62- ஆம் ஆண்டு வைகாசி விசாக, வருடாபிஷேக விழா காப்புக் கட்டுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வினை தீா்க்கும் வேலவா் முருகன்.

Updated On :22 மே 2026, 2:51 am IST

ராமநாதபுரத்தில் வினை தீா்க்கும் வேலவா் முருகன் கோயிலில் 62- ஆம் ஆண்டு வைகாசி விசாக, வருடாபிஷேக விழா காப்புக் கட்டுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 29- ஆம் தேதி காலை வருடாபிஷேக விழாவும், 30- ஆம் தேதி வைகாசி விசாக திருவிழாவும் நடைபெறுகிறது. இதில் காலை 10 மணிக்கு விரதமிருந்த பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்வா். தொடா்ந்து அன்னதானமும், மாலை 4 மணிக்கு பூ வளா்த்தல் நிகழ்வும், இரவு 9 மணிக்கு பக்தா்கள் காவடி, பறவைக் காவடிகள் எடுத்து வந்து பூக்குழி இறங்கும் நிகழ்வும் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை எஸ். கருப்பையா சுவாமிகள் அறக்கட்டளை செய்து வருகிறது.