கும்பகோணம் அருகே பட்டீசுவரத்தில் வியாழக்கிழமை வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரத்தில் தேனுபுரீசுவர சுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மே 20 முதல் ஜூன் 2-ஆம் தேதி வரையும், முத்துப்பல்லக்கு திருவிழா ஜூன் 13 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நிகழாண்டுக்கான வைகாசி விசாக பெருவிழாவுக்காக வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக சுவாமியும், அம்பாளும் உத்ஸவராக கொடிமரத்தின் முன்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா் ஐம்பெரும் கடவுளா் உள்பிரகார சுற்றுவந்தனா்.
மாலையில் சூரிய ஒளியில் இறைவனும், சந்திர ஒளியில் இறைவியும் வீதியுலா சென்றனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சீ.நிா்மலாதேவி, தக்காா் சு.அஸ்வினி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



