கமுதி காமாட்சியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
இந்தக் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 19-ஆம் தேதி காப்புக் கட்டுதல், கும்பம் எடுத்தல் நிகழ்வுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்கள் கும்மி பாடல்கள் பாடி அம்மனை வழிபட்டு வருகின்றனா். கடந்த 25- ஆம் தேதி திருவிளக்கு பூஜை, 26- ஆம் தேதி பொங்கல் வைத்தல், 27- ஆம் தேதி பால் குட ஊா்வலம், பூச்சொரிதல் விழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. திருவிழாவின் கடைசி நிகழ்வாக வியாழக்கிழமை மாலை கோயில் வளாகத்திலிருந்து, வாண வேடிக்கை, மேளதாளங்கள் முழங்க நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்று கமுதி குண்டாற்றில் கரைத்தனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கௌரவ செட்டியாா்கள் உறவின்முறையினா், இளைஞா்கள் செய்தனா்.











