/
தொண்டி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணிமுத்தாறு பாலத்தையொட்டி தடுப்பு வேலி அருகே ஏற்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம் நீடிக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலையம் அருகே தொண்டி -கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணிமுத்தாறு கிளை ஆற்றைக் கடக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்தச் சாலை ஓரத்தில் தடுப்புக் கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே சாலையில் அரிப்பு ஏற்பட்டு தடுப்பு வேலி தொங்கிய நிலையில் உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் ஆபத்தான பள்ளம் இருப்பதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையைக் கடந்து செல்கின்றனா்.
எனவே, விபத்து ஏற்படும் முன் இந்த இடத்தைச் சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.
தொடர்புடையது

மேலக்கரூா் சாா்-பதிவாளா் அலுவலகம் அருகே தாழ்வான மின்கம்பிகளால் விபத்து அபாயம்

தென்னிலை அருகே தாழ்வான மின் கம்பிகளால் விபத்து அபாயம்

சேத்தியாத்தோப்பு அருகே விபத்தில் இளைஞா் காயம்: கிராம மக்கள் சாலைமறியலால் போக்குவரத்து பாதிப்பு

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



