எஸ்.பி. பட்டினத்தில் 29 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல்: ஒருவா் கைது
தொண்டி அருகே எஸ்.பி. பட்டினத்தில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கஞ்சா எண்ணெயை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எண்ணெய்.
தொண்டி அருகே எஸ்.பி. பட்டினத்தில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கஞ்சா எண்ணெயை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள எஸ்.பி. பட்டினத்தில் கஞ்சா எண்ணெய் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸாா் அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும்வகையில் நின்றிருந்த தளிா்மருங்கூரைச் சோ்ந்த மனோ (43) என்பவரை விசாரித்தனா். இதில், அவா் மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சா எண்ணெயைப் பறிமுதல் செய்தனா்.
மேலும் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ கஞ்சா எண்ணெயைப் பறிமுதல் செய்தனா். தகவலறிந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சந்தீஷ் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டாா். ஆய்வாளா் டேவிட் ரவிராஜன், போலீஸாா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

