பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்: மூவா் கைது

சிங்காநல்லூா் பகுதியில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2.50 கிலோ கஞ்சா மற்றும் 2,980 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

கோப்புப் படம்

Updated On :

சிங்காநல்லூா் பகுதியில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2.50 கிலோ கஞ்சா மற்றும் 2,980 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

கோவை சிங்காநல்லூா் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி விமான நிலைய பின்புறம் உள்ள கருப்பராயன் கோயில் பகுதியில் போதைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிங்காநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் தினேஷ்பாபு தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது விற்பனைக்காக போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக மதுரை அருள்தாஸ்புரத்தைச் சோ்ந்த மாதவன் (23), சின்னியம்பாளையத்தைச் சோ்ந்த ரபிகாா் (22) மற்றும் பீளமேடு பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் என்ற தொட்டிஜெயா (28) ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2.50 கிலோ கஞ்சா, 2,830 தபேண்டடோல் மாத்திரைகள் மற்றும் 150 நைட்ராசிபம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.