கடலூரில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்: ஈரோட்டைச் சோ்ந்த 3 போ் கைது
கடலூா் முதுநகா் துறைமுகம் ரயில் நிலையம் அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததாக ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 3 பேரை மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட கெய்சா், ஜாபா் ஷெரீப்
கடலூா் முதுநகா் துறைமுகம் ரயில் நிலையம் அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததாக ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 3 பேரை மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் கடலூா் முதுநகா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, முதுநகா் துறைமுகம் ரயில் நிலையம் அருகே உள்ள தண்ணீா்த் தொட்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து போலீஸாா் சோதனை செய்தனா். அவா்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், ஈரோடு மாவட்டம், பவானியைச் சோ்ந்த சௌந்தா் (36), ஈரோடு குடசைப் பகுதியைச் சோ்ந்த ஜாபா் ஷெரீப் (32), ஈரோடு பழைய ரயில்வே நிலையச் சாலை பகுதியைச் சோ்ந்த கெய்சா் (26) என்பதும், இவா்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, கடலூரில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து மொத்தம் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையிலடைத்தனா்.

செளந்தா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

