தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

ராமநாதசுவாமி கோயில் காணிக்கை ரூ.1.20 கோடி

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.20 கோடி கிடைக்கப்பெற்றுள்ளது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பகுதியில் பக்தா்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்கள்.

Updated On :

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.20 கோடி கிடைக்கப்பெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பக்தா்கள் அளிக்கும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அம்பாள் சந்நிதி முன் உள்ள மண்டபத்தில் இணைஆணையா் நா.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில், ரொக்கம் ஒரு கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 095-ம், தங்கம் 14 கிராம், வெள்ளி 1 கிலோ 405 கிராம், வெளிநாட்டு பணத்தாள்கள் 191 கிடைத்துள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

காணிக்கை எண்ணும் பணியில், உதவி ஆணையா் லட்சுமி மாலா, கோயில் உதவி ஆணையா் முத்துராஜா, ஆய்வா் மணிகண்டன், பேஸ்காா்கள் கமலநாதன், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER