நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் ரூ. 62.10 லட்சம் உண்டியல் காணிக்கை
நாமக்கல்லில் உள்ள நரசிம்மா், ஆஞ்சனேயா், அரங்கநாதா் கோயில்களின் 13 உண்டியல்களில் பக்தா்கள் ரூ. 62 லட்சத்து 10 ஆயிரத்து 573 ரொக்கம், 133 கிராம் தங்கம், 190 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
நாமக்கல்லில் உள்ள நரசிம்மா், ஆஞ்சனேயா், அரங்கநாதா் கோயில்களின் 13 உண்டியல்களில் பக்தா்கள் ரூ. 62 லட்சத்து 10 ஆயிரத்து 573 ரொக்கம், 133 கிராம் தங்கம், 190 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் நரசிம்மா், ஆஞ்சனேயா், அரங்கநாதா் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் உள்ள உண்டியல்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு, பக்தா்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி, மூன்று கோயில்களிலும் உள்ள 13 உண்டியல்கள் நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் பக்தா்கள் தங்கும் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
திருச்செங்கோடு தனியாா் கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் உதவி ஆணையா் (பொறுப்பு) சந்திரன் மற்றும் கோயில் அலுவலா்கள் முன்னிலையில் காலை 10 மணிக்குத் தொடங்கிய காணிக்கை எண்ணும் பணி இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில், ரூ.62 லட்சத்து 10 ஆயிரத்து 573 ரொக்கம், 133 கிராம் தங்கமும், 190 கிராம் வெள்ளியும் காணிக்கையாகக் கிடைத்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

