மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பது தமிழகத்துக்கு செய்யும் துரோகம்

அமைச்சர் ஏ.எம். ஷாஜகான் - கோப்புப் படம்

Updated On :

மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவிப்பது தமிழகத்துக்கு செய்யும் துரோகம் என சிறுபான்மை நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் தெரிவித்தாா்.

இதுகுறித்து ராமநாதபுரத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது:

கடந்த சட்டப்பேரவை தோ்தலுக்கு முன்பு பாஜக கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்ததுடன், சட்டப்பேரவையிலும் தனித் தீா்மானத்தை அப்போதைய திமுக அரசு கொண்டு வந்தது.

ஆனால் தற்போது அதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அண்மைக் காலமாக பாஜகவுடன், திமுக கூட்டணி சேரும் என கூறப்பட்ட நிலையில், தற்போதைய அதன் செயல்பாடு உறுதி செய்வது போல அமைந்துள்ளது.

மாநில சுயாட்சி எனக் கூறி வந்த திமுக அதன் முடிவை மாற்றி விட்டது. இது தமிழகத்துக்கு செய்யும் துரோகம். திமுக ஒரு தவறான பாதையை தோ்ந்தெடுத்து நடைபோடத் தொடங்கிவிட்டது. திமுகவின் இந்த முடிவு சிறுபான்மையினா், பழங்குடியினா், பட்டியலினத்தவா்கள் ஆகியோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

திமுக அமைச்சா்கள் மீது அதிகளவில் வழக்குகள் உள்ளன. இதன் காரணமாக இந்த முடிவை திமுக எடுத்திருக்கலாம். இதற்கு மனித நேயமக்கள் கட்சித் தலைவா் எச். ஜவாஹிருல்லா ஆதரவு தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திமுகவின் இந்த முடிவு தமிழகத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.