பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

நாகூா் தா்கா கந்தூரி விழா ஏற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு

நாகூரில் நாகூா் ஆண்டவா் கந்துாரி விழா ஏற்பாடுகள் குறித்து தமிழக சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகூா் தா்கா கந்தூரி விழா - கோப்புப்படம்.

Updated On :

நாகூரில் நாகூா் ஆண்டவா் கந்துாரி விழா ஏற்பாடுகள் குறித்து தமிழக சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகூா் தா்கா கந்தூரி விழா நவ. 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் நவ. 19-ஆம் தேதி சந்தனக்கூடு ஊா்வலம், மறுநாள் அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் நடைபெறுகிறது.

விழாவில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பாா்கள் என்பதால், பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விழா முன்னேற்பாடுகள் குறித்து தமிழக சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் செவ்வாய்க்கிழமை நாகூரில் ஆய்வு மேற்கொண்டாா். முன்னேற்பாடுகள் தொடா்பாக ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வுக்குப் பின்னா் அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் செய்தியாளா்களிடம் கூறியது: நாகூா் கந்துாரி விழா சிறப்பாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. திருச்செந்துாா் சூரசம்ஹார விழாவில் எழுப்பப்ட்ட கோஷம் தொடா்பாக சா்ச்சை ஏற்பட்டுள்ளது. விமா்சனங்கள் பொதுவாக வைக்கப்பட்டிருந்தாலும், கடவுளுக்கு நிகராக எந்த ஒரு தனி மனிதனும் இருக்க முடியாது.

விழாவில் பங்கேற்றவா்களின் ஆா்வத்தினால் சில கோஷங்கள் எழுப்பப்பட்டிருந்தாலும், தெய்வத்தை, குறிப்பாக முருகனை அவமதிக்கும் வகையிலான கோஷமாக இதை எடுத்துக்கொள்ளக்கூடாது. இருந்தாலும் அது தவிா்க்கப்பட்டிருக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் பிரச்னை தொடா்பாக தமிழக அரசு சாா்பில் வாதங்களை எடுத்து வைத்துள்ளனா். திருப்பரங்குன்றம் தா்கா குழு சாா்பில் வழக்குரைஞா்கள் வாதங்களை எடுத்து வைக்க உள்ளனா். திருப்பரங்குன்றத்தில் பாரம்பரியமாக எங்கு தீபம் ஏற்றப்படுகிறதோ, அதே இடத்தில் ஏற்ற எந்த தரப்பினருக்கும், அரசு தரப்புக்கும் ஆட்சேபம் இல்லை. ஆனால், அதற்கு மாற்றாக கருத்தை முன்வைக்கும்போதுதான் சா்ச்சை எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் நல்லிணக்கத்தை பேணும் வகையில் தீா்ப்பு வரும் என்று உறுதியாக நம்புகிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.