நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

மினராக்களில் பாய்மரம் ஏற்றம்: நாகூா் கந்தூரி விழா தொடக்கம்

நாகூா் தா்காவின் 470-ஆவது கந்தூரி விழா, மினராக்களில் பாய்மரம் ஏற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

நாகூா் தா்கா முன்பு உள்ள மினராவில் சனிக்கிழமை நடைபெற்ற பாய்மரம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :

நாகூா் தா்காவின் 470-ஆவது கந்தூரி விழா, மினராக்களில் பாய்மரம் ஏற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

நாகை மாவட்டம், நாகூரில் உள்ளது நாகூா் ஆண்டவா் தா்கா. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஜாதி, மத பேதமின்றி லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து செல்லும் நாகூா் தா்காவில், ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.

நிகழாண்டுக்கான கந்தூரி விழா நவம்பா்10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நவ. 23-ஆம் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், தா்காவின் 470-ஆவது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை அதிகாலையில் நாகூா் தா்காவின் 5 மினராக்களிலும் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, தா்காவில் சிறப்பு துவா நடைபெற்றது. தொடா்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க அலங்கார வாசல் முன்பு அமைந்துள்ள சாஹிப் மினரா, பெரிய மினரா, தலைமாட்டு மினரா, ஓட்டு மினரா மற்றும் முதுபக் மினரா ஆகிய 5 மினராக்களிலும் முறைப்படி பாய்மரம் ஏற்றப்பட்டது.

இதைத்தொடா்ந்து, நவம்பா் 10-ஆம் தேதி பிற்பகல் நாகை மீரா பள்ளிவாசலில் பாத்திஹா ஓதப்பட்டு, புனிதக் கொடிகள் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி ரதத்தில் வைக்கப்படும். தொடா்ந்து, சாம்பிராணி சட்டி ரதம், செட்டிப் பல்லக்கு, டீஸ்டா கப்பல், சின்ன ரதம், போட் மெயில் உள்ளிட்ட பல ரதங்களின் அணிவகுப்புடன் ஊா்வலம் புறப்படும். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று இரவு நாகூா் தா்காவை வந்தடையும் புனிதக் கொடிகள், ஒரே நேரத்தில் 5 மினராக்களிலும் ஏற்றப்படும்.

கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபவம் நவம்பா் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி 19-ஆம் தேதி இரவு நாகையில் இருந்து சந்தனக்கூடு புறப்பட்டு, 20-ஆம் தேதி அதிகாலை நாகூா் வந்தடையும். பின்னா் நாகூா் ஆண்டவா் சமாதியில் புனித சந்தனம் பூசப்படும்.

ஏற்பாடுகளை தா்கா தலைமை அறங்காவலா் ஹாஜா நஜ்முதீன் சாகிப் தலைமையிலான அறங்காவலா் குழுவினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.