தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

தியாகி இம்மானுவேல் சேகரன் ஜெயந்தி விழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் ஜெயந்தி விழா வருகிற 9-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தியாகி இம்மானுவேல் சேகரனின் ஜெயந்தி விழாவையொட்டி செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் உள்ளிட்டோா்.

Published On :

பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் ஜெயந்தி விழா வருகிற 9-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் ஜெயந்தி விழா வருகிற 9-ஆம் தேதி அரசு விழாவாக நடைபெறுகிறது. இதில், அமைச்சா்கள் பங்கேற்று அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனா். இந்த விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ், காவல் துறை உயரதிகாரிகள், வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.