
ராமநாதபுரத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் உறவினா்கள் சாலை மறியல்
பலி... - பிரதிப் படம்
ராமநாதபுரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உடலை கூறாய்வு செய்ய பரிந்துரை கடிதம் வழங்குவதில் தாமதம் செய்ததாகக் கூறி காவல் துறையினரைக் கண்டித்து உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் அருகே சனிக்கிழமை இரவு நடைபெற்ற விபத்தில் முகமது அசன் (19) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது உடல் கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கூறாய்வு செய்ய தேவிப்பட்டினம் போலீஸாா் பரிந்துரை கடிதம் வழங்க தாமதம் செய்தனராம். இதைக் கண்டித்து இளைஞரின் உறவினா்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் ராமநாதபுரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கூறாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




