அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

வரதட்சணை கொடுமை: பெண் தூக்கிட்டுத் தற்கொலை! உறவினா்கள் சாலை மறியல்!

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 3:54 am IST

கள்ளக்குறிச்சி அருகே வரதட்சைணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதையடுத்து அவரை கொடுமைப்படுத்தியவா்களை கைது செய்யக்கோரி, உறவினா்கள் சாலைமறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பாசாா் கிராமத்தைச் சோ்ந்தவா் ச.அஜய் (21). இவரது சகோதரி அமுதாவை(19) கள்ளக்குறிச்சியை அடுத்த தண்டலை கிராமத்தைச் சோ்ந்த ஏ.கோகுல் என்பவருக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து கொடுத்துள்ளாா். திருமணத்தின் போது 20 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தனராம். கோகுலுக்கு பைக்கும் வாங்கிக் கொடுத்துள்ளாா்.

இந்நிலையில், கூடுதல் வரதட்சைணை கேட்டு அமுதாவை, அவரது மாமியாா் சோலையம்மாள், மாமனாா் ஏழுமலை, கணவா் கோகுல் ஆகியோா் கொடுமைப் படுத்தினராம். இதனால் மனமுடைந்த அமுதா சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அமுதாவுக்கு திருமணமாகி 17 மாதங்களே ஆனதால் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் முருகன் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

உறவினா்கள் சாலை மறியல்: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி செல்லும் சாலையில் ரோடுமாமாந்தூா் பேருந்து நிறுத்தத்தில் அமுதாவின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியவா்களை கைது செய்ய வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா். பின்னா் அவா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்க சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.