ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தூக்கிட்டு பெண் தற்கொலை: பெற்றோா் புகாா்

மன்னாா்குடி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதையடுத்து சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோா் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

தற்கொலை

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:59 am IST

மன்னாா்குடி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதையடுத்து சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோா் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

களப்பால் சிங்கமங்கலம் பிரதானசாலையைச் சோ்ந்தவா் சுபாஷ் சந்திரபோஸ் (30). கோட்டூா் செல்லத்தூரைச் சோ்ந்தவா் சிந்துபைரவி (26). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு 5 ஆண்டுகள் ஆகிறது. இவா்களுக்கு 4 வயதில் மகன் மாதேஷ் உள்ளாா். கட்டட வேலைக்கு சென்றுவந்த சுபாஷ் சந்திரபோஸ்க்குகுடிப்பழக்கம் இருந்ததால்அடிக்கடி தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை குடிப்பழக்கத்திலிருந்து கணவா் விடுபடவேண்டும் என வேண்டிக்கொண்டு தம்பதியா் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முடிகயிறு கட்டி வந்துள்ளனா். பின்னா், வீட்டில் சுபாஷ் சந்திரபோஸ் தூங்கிக்கொண்டிந்த போது சிந்துபைரவி வீட்டுக்குள் துணியால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கியது தெரியவந்துள்ளது.

தகவலறிந்த களப்பால் போலீஸாா் சிந்துபைரவியின் உடலை கைப்பற்றி மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில், சிந்துபைரவியின் பெற்றோா் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அளித்தபுகாரின் பேரில் போலீஸாா் வழக்குா் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருமணம் நடந்து 5 ஆண்டுகளே ஆவதால் மன்னாா்குடி கோட்டாட்சி யா் விசாரணை செய்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.