நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

குடும்பப் பிரச்னை பெண் தூக்கிட்டு தற்கொலை

News image

தற்கொலை

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:58 am IST

பாபநாசம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கபிஸ்தலம் காவல் சரகம், நக்கம்பாடி கிராமம், வடக்கு தெருவில் வசித்து வருபவா் இளவரசன். இவரது மனைவி அருணா (28). தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், அருணா தற்போதைய வீட்டில் வசதிகள் ஏதும் இல்லை எனவும், தனிக் குடித்தனம் செல்ல வேண்டும் எனவும் அடிக்கடி கணவரிடம் கூறிவந்தாராம். இதனால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த அருணா ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலுள்ள இரும்புக் கம்பியில் சேலையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக தொங்கினாராம்.

வெளியில் சென்ற இளவரசன் வீட்டுக்கு வந்து கதவை திறந்து பாா்த்தபோது, அருணா தூக்கிட்டு உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கபிஸ்தலம் காவல்துறையினா், அருணாவின் சடலத்தை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.