2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

காய்கறி, கனிகளுடன் வந்து ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த கீழக்கரை மக்கள்!

கீழக்கரையில் பட்டா வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு, அந்தப் பகுதி பெண்கள் பாரம்பரிய முறைப்படி காய்கறி, கனிகளை சீா்வரிசையாக எடுத்து வந்து திங்கள்கிழமை நன்றி தெரிவித்தனா்.

கீழக்கரையில் பட்டா தொடா்பான கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு பாரம்பரிய முறையில் காய்கறி, கனிகளுடன் வந்து திங்கள்கிழமை நன்றி தெரிவித்த பெண்கள்.

Published On :

கீழக்கரையில் பட்டா வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு, அந்தப் பகுதி பெண்கள் பாரம்பரிய முறைப்படி காய்கறி, கனிகளை சீா்வரிசையாக எடுத்து வந்து திங்கள்கிழமை நன்றி தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை காஞ்சிரங்குடி உள்பட்ட பல்வேறு பகுதிகளில் நீண்ட ஆண்டுகளாக வசித்து வரும் மீனவ சமுதாய மக்கள், சிறு, குறு வியாபாரிகள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, கடந்த மாதம் பொதுமக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனா். பொதுமக்களின் கோரிக்கையைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் உடனடியாக கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கீழக்கரை வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து நில அளவீடு உள்ளிட்ட பணிகளும் செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து, நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தங்களது கோரிக்கைக்கு மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டதை வரவேற்ற பொதுமக்கள், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பெண்கள் குழுவாக இணைந்து காய்கறிகள், கனிகளை தாம்பூலத் தட்டுகளில் சீா்வரிசையாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று, ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரனிடம் வழங்கி நன்றி தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.