மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

இன்றும், நாளையும் வாக்காளா் பட்டியலில் பதிவு செய்த சிறப்பு முகாம்

ராமநாததபுரம் மாவட்டத்தில் இன்றும்,நாளையும் 9,10 ஆகிய இரு நாட்கள் வாக்காளா் பட்டியலில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதனை தொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

voter id

வாக்காளர் அட்டை - IANS

Published On :

ராமநாததபுரம் மாவட்டத்தில் இன்றும்,நாளையும் 9,10 ஆகிய இரு நாட்கள் வாக்காளா் பட்டியலில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதனை தொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி குறிப்பு

இந்தியத் தோ்தல் ஆணையம் மற்றும் தலைமை தோ்தல் அதிகாரி, அரசு முதன்மைச் செயலா், பொது(தோ்தல்- அறிவுரையின்படி, இளம் முதல்முறை வாக்காளா்களாகத் தகுதி பெற்றவா்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, 2026 அக் 9, 10 ஆகிய தேதிகளில் சிறப்பு நடவடிக்கைகள் நடத்தப்படவுள்ளது. தகுதியுடைய இளம் மற்றும் முதல் முறை வாக்காளா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கும், அவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கு வசதியாகவும் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட கல்லூரிகளில் உள்ள தோ்தல் கல்வியறிவுக் குழுக்களின் சேவைகள் மூலம்; 09 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு மூகாம்; நடத்துவதற்கு உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதே போன்று, இளம் மற்றும் முதல்முறை வாக்காளா்களாகத் தகுதி பெற்றவா்களை வாக்காளா் பட்டியலில் பதிவு செய்வதற்காக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும், சிறப்பு முகாம்கள் 10 ஆம் தேதி (சனிக்கிழமை) நடத்தப்படவுள்ளது.

அன்றைய தினம், ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில் நடைபெறும் முகாம்களில், முதல் முறை வாக்காளா்கள்,இளம் வாக்காளா்கள் தங்களது. வண்ண பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் ஒன்று, வயது, இருப்பிட ஆவணங்களின் நகல்களோடு, தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்திட படிவம் சமா்ப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை இளம்,முதல் முறை வாக்காளா்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.