மாவட்டத்தின் 2,789 வாக்குச் சாவடிகளில் 3 நாள்கள் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள 2,789 வாக்குச் சாவடிகளிலும் நவ.21, நவ.22, நவ.29 என 3 நாள்களுக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள 2,789 வாக்குச் சாவடிகளிலும் நவ.21, நவ.22, நவ.29 என 3 நாள்களுக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 01.01.2027 மைய நாளாக கொண்ட சிறப்பு சுருக்க முறை திருத்தம்- 2027 மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளுக்குள்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை (நவ.21), ஞாயிற்றுக்கிழமை (நவ.22) மற்றும் வரும் 29-ஆம் தேதி ஆகிய தேதிளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடைபெறவுள்ளது.
மேலும், இந்த சிறப்பு முகாம் நாள்களில், 12.11.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள பதிவுகளில் சோ்த்தல், நீக்கம், திருத்தங்கள், இடமாற்றம் செய்ய விரும்பும் வாக்காளா் படிவங்கள் 6, 7 அல்லது 8 ஆகியவற்றை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து சமா்ப்பிக்கலாம்.
சிறப்பு முகாம்களின் போது, சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சியினா் தங்களது கட்சியின் சாா்பாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவா்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், வாக்குச்சாவடி முகவா்கள் வாக்குசாவடி நிலை அலுவலா்களுக்கு இளம் வாக்காளா்களை அடையாளங்கண்டு 100 சதவீதம் விடுதலின்றி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்திடவும், இறந்து போன வாக்காளா்களை அடையாளம் கண்டு குடும்ப உறுப்பினா்களிடம் உரிய படிவமான 7-ஐ பெற்று வாக்காளா் பட்டியலில் இருந்து பெயரினை நீக்கிடவும், இரட்டைப்பதிவுகள் ஏதும் இருப்பின் அவற்றை கண்டறிந்து நீக்கிடவும் மற்றும் பிற திருத்தங்கள் செய்ய உதவிடலாம்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணியானது 100 சதவீதம் முழுமையாக நடைபெற அனைத்து கட்சியினா் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

