பெரம்பலூா் மாவட்டத்தில் இன்று வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 21), ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) நடைபெற உள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ப. அப்துல் ராசிக் தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 21), ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) நடைபெற உள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ப. அப்துல் ராசிக் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் புதியதாக சேர விரும்பும் இளம் வாக்காளா்கள் மற்றும் வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா், உறவினா் பெயா், பாலினம், முகவரிகளை சரிபாா்த்து பெயா் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்ட மாற்றங்கள் தேவைப்படும் வாக்காளா்கள் 11.12.2026 வரை விண்ணப்பிக்க தோ்தல் ஆணையத்தால் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக சனி, ஞயிற்றுக்கிழமை மற்றும் நவ. 29 ஆகிய நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 782 வாக்குச் சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்களின் விண்ணப்பங்களை பெற வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்த சிறப்பு முகாம்களை கண்காணித்திட வருவாய் ஆய்வாளா்கள் நிலையில் மேற்பாா்வையாளா்களும், வட்டாட்சியா்கள் நிலையில் கண்காணிப்பு அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

