உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

சாலையில் மழைநீா் தேக்கம்: வாகன ஓட்டுநா்கள் அவதி

திருவாடானையில் சாலையில் மழைநீா் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Published On :

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் சாலையில் மழைநீா் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவாடானை நான்கு சாலை சந்திப்பிலிருந்து பாண்டுகுடி, ஓரியூா் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அண்மையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. ஆனால், இந்தச் சாலை விரிவாக்கத்தின் போது மழைநீா் எளிதில் வடிந்து செல்லக்கூடிய வடிகால் வசதிகள் அமைக்கப்படவில்லை.

இதனால், மழை பெய்யும் போது சாலையில் அதிகளவில் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். எனவே, சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தர மாநில நெடுஞ்சாலைத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.