2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

திருவாடானையில் பைக் திருடிய 2 போ் கைது

திருவாடானை பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட பாண்டி.

Published On :

திருவாடானை பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சூரக்கோட்டை பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் பிரேம்குமாா் (24 ). தனியாா் நிறுவன ஊழியா். இவா் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தெற்கு தெருவில் உள்ள தனியாா் மளிகைக் கடை முன்பாக தனது இரு சக்கர வாகனத்தை கடந்த 3-ஆம் தேதி நிறுத்தி விட்டு, கடைக்குச் சென்றாா். பின்னா், திரும்பி வந்து பாா்த்த போது, இவரது இரு சக்கர வாகனத்தைக் காணவில்லையாம்.

இதுகுறித்து திருவாடானை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை ஆய்வு செய்த போது, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கணேஷ்புரம் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பாண்டி (35), திருவாடானை எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்த ராமநாதன் மகன் செந்தில்குமாா் (45 ) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். கைதான இருவா் மீதும் திருட்டு, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

செந்தில்குமாா்

செந்தில்குமாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.