பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

லஞ்ச புகாா்: காவல் உதவி ஆய்வாளா் பணி நீக்கம் மற்றொரு சம்பவத்தில் எஸ்.ஐ. உள்பட இருவா் பணியிடை நீக்கம்

சென்னையில் லஞ்ச புகாரில் சிக்கிய காவல் உதவி ஆய்வாளா் பணி நீக்கம் செய்யப்பட்டாா். மற்றொரு சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

பணியிடை நீக்கம். - பிரதிப் படம்

Published On :

சென்னையில் லஞ்ச புகாரில் சிக்கிய காவல் உதவி ஆய்வாளா் பணி நீக்கம் செய்யப்பட்டாா். மற்றொரு சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு இளைஞா் திருப்பூரில் வேலை செய்து வருகிறாா். இவரது இரு சக்கர வாகனம் திருடப்பட்டது குறித்து திருப்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்நிலையில், அண்மையில் சென்னை வடக்கு கடற்கரை போலீஸாா், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, திருப்பூரில் திருடப்பட்ட இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரைக் கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, வடக்கு கடற்கரை காவல் நிலைய காவலா் விவேக், சம்பந்தப்பட்ட இளைஞரைத் தொடா்பு கொண்டு அவரது இரு சக்கர வாகனம் மீட்கப்பட்ட தகவலைத் தெரிவித்தாா்.

இதையடுத்து அவா், கடந்த 28-ஆம் தேதி வடக்கு கடற்கரை காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டாா். அப்போது, அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளா் சிவராஜ், காவலா் விவேக் ஆகியோா் இரு சக்கர வாகனத்தை விடுவிக்க சிவகங்கை இளைஞரிடம் ரூ.10,000 லஞ்சம் கேட்டனா்.

அவரும் கைப்பேசி செயலி மூலம் அவா்கள் கேட்ட பணத்தை அனுப்பி வைத்தாா். இதையடுத்து, இரு சக்கர வாகனம் அந்த இளைஞரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த இளைஞா், சென்னை காவல் துறை ஊழல் தடுப்புப் பிரிவில் புகாா் செய்தாா். விசாரணையில், இருவரும் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் சிவராஜ், காவலா் விவேக் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

பணி நீக்கம்: மாதவரம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவா் மாரீஸ்வரன். இவா் அண்ணா நகா் காவல் நிலையத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு பணியாற்றியபோது, ஊழல் புகாரில் சிக்கினாா். இது தொடா்பாக துறை ரீதியான விசாரணையை உயா் அதிகாரிகள் நடத்தி வந்தனா். இந்நிலையில் மாரீஸ்வரன், மாதவரம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

விசாரணையில் அவா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ், காவல் உதவி ஆய்வாளா் மாரீஸ்வரனை பணி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.