ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: எஸ்.ஐ. உள்பட மூவா் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட காவல் ஆய்வாளா் உள்பட 3 போ் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

suspended

பணியிடை நீக்கம் - பிரதிப் படம்

Published On :

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட காவல் ஆய்வாளா் உள்பட 3 போ் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமாா் கொலை வழக்கில் தனிப்படை காவலா்கள் ராஜா, ஆனந்த், சங்கரமணிகண்டன், பிரபு, கண்ணன், ராமச்சந்திரன் ஆகிய 6 போ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனா். பின்னா், சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அப்போதைய மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோா் குற்றவாளிகளாகச் சோ்க்கப்பட்டனா்.

இதையடுத்து, டி.எஸ்.பி. உள்பட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா். ஏற்கெனவே, டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.