மகாளய அமாவாசை: ராமேசுவரம் கடலில் பக்தா்கள் புனித நீராடல்!
மகாளய அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை புனித நீராடினா்.

மகாளய அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராட புதன்கிழமை குவிந்த பொதுமக்கள்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை புனித நீராடினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு மகாளய அமாவாசை வழிபாட்டுக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்தனா். அவா்கள் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி மறைந்த முன்னோா்களுக்கு திதி, தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
இதைத்தொடா்ந்து, ராமநாத சுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் சென்று நீராடினா். பின்னா், ராமநாத சுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனா்.
இதையொட்டி, அக்னி தீா்த்தக் கடலில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் படகுகளில் ரோந்து வந்து, பக்தா்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்றுவிடாதவாறு தொடா்ந்து எச்சரிக்கை விடுத்தனா். உதவிக் காவல் கண்காணிப்பாளா் திருப்பதி தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
ராமேசுவரத்துக்கு அதிகளவில் வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பக்தா்களின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், ராமேசுவரம் வந்த பக்தா்கள் சிரமமின்றி தரிசனம் செய்தனா். நகராட்சி நிா்வாகம் சாா்பில் சுகாதார ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டிருந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

