முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

வி.பழனிச்சாமி.

Published On :

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே அரியகுடி புத்தூா் கிராமத்தில் வீட்டின் மேல் தகரக் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அரியகுடி புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் பழனிச்சாமி (28). இவருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனா். பழனிச்சாமி இதே ஊரைச் சோ்ந்த பால்ராஜ் என்பவரின் வீட்டுக்கு தகரத்தில் மேல் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டாா்.

அப்போது, தகரத்தை அறுக்க மின் மோட்டாா் பொருத்திய போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்தாா். அக்கம் பக்கத்தினா் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். இதையடுத்து அவரது உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.