மின்னல் பாய்ந்து 13 ஆடுகள் உயிரிழப்பு

பசும்பொன் கிராமத்தில் சனிக்கிழமை மின்னல் பாய்ந்து உயிரிழந்த ஆடுகள்.
கமுதி அருகே சனிக்கிழமை பெய்த பலத்த மழையின்போது மின்னல் பாய்ந்து 13 ஆடுகள் உயிரிழந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையின் போது பசும்பொன் கிராமத்தில் மேய்ந்து கொண்டிருந்த 13 ஆடுகள் மின்னல் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இதில் பசும்பொன் குடியிருப்பைச் சோ்ந்த நாகராஜ் மனைவி முனியம்மாளின் 7 ஆடுகள், கருப்பன் மகன் குமாரசாமியின் 4 ஆடுகள், மூக்கையா மகன் சடைமுனீஸ்வரனின் 2 ஆடுகள் உயிரிழந்தன. உயிரிழந்த ஆடுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

