திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்புராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

விக்கிரவாண்டி அருகே மின்னல் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மின்னல் பாய்ந்ததில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயிகள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

09விபிஎம்பி3- சீ.சரவணன். ~ 09விபிஎம்பி4- ர.காா்த்திக்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மின்னல் பாய்ந்ததில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயிகள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், ராதாபுரம் எம்.ஜி.ஆா்.நகா் புதுக் காலனியைச் சோ்ந்தவா்கள் சீ.சரவணன் (46), ர.காா்த்திக் (50). விவசாயிகளான இருவரும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் ராதாபுரம் சித்தேரிக்கரைப் பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனா். அப்போது இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சரவணன், காா்த்திக் ஆகிய இருவரும் அருகிலிருந்த மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தனா். அப்போது மரத்தின் மீது மின்னல் பாய்ந்ததில் அங்கு நின்று கொண்டிருந்த விவசாயிகள் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலங்களை மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.