சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் விடியோ பதிவிட்டதாக 3 போ் கைது
கமுதி அருகே வாளுடன் இருப்பது போல விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கமுதி அருகே வாளுடன் இருப்பது போல விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கீழராமநதியில் வாளுடன் திரைப்பட பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து அதை சிலா் விடியோவாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனா். இதையடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் கீழராமநதி கிராமத்தைச் சோ்ந்த சாகுல்ஹமீது மகன் சையது இப்ராஹிம் (18), காதா் மகன் சிந்தாமிதாா் (18), பெருமாள் தேவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் பாலாஜி (22) ஆகிய 3 பேரை கமுதி போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

