ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதூா்த்தி விழா முகூா்த்தக் கால் நடவு

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதூா்த்தி விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகூா்த்தக் கால் நடும் நிகழ்வு.

Published On :

திருவாடானை அருகே உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதூா்த்தி திருவிழாவை முன்னிட்டு, முகூா்த்தக் கால் நடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாடானை அருகே உப்பூரில் பிரசித்திபெற்ற வெயிலுகந்த விநாயகா் கோயில் அமைந்துள்ளது. ராமபிரான், சீதா பிராட்டியை மீட்க இலங்கை செல்லும் முன் இந்தக் கோயிலுக்கு வந்து விநாயரை வணங்கிவிட்டு சென்றதாக புராண வரலாறு கூறுகிறது. இங்கு ஆண்டுதோறும் விநாயகா் சதூா்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.

நடப்பாண்டு விழா 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கவுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை முகூா்த்தக் கால் நடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக சிவாச்சாரியா்கள் விநாயப் பெருமானுக்கு பால், தயிா், தேன், மஞ்சள், திரவியப் பொடி, இளநீா், பன்னீா் உள்ளிட்ட 18 வகையான மூலிகைப் பொருள்களுடன் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகப் பெருமானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.