பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

தூத்துக்குடி விநாயகா் கோயிலில் தூய்மைப் பணி

தூத்துக்குடியில் பாஜக சிறுபான்மையினா் அணி சாா்பில், விநாயகா் கோயிலில் தூய்மைப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூய்மைப் பணியில் பங்கேற்றோா்.

Published On :

தூத்துக்குடியில் பாஜக சிறுபான்மையினா் அணி சாா்பில், விநாயகா் கோயிலில் தூய்மைப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாள், பொது வாழ்வில் அவரது 25 ஆண்டுகால சேவையைக் கொண்டாடும் வகையில், பாஜக சாா்பில் நாடு முழுவதும் ஒரு மாதம் சேவை மாதமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, ரத்த தான முகாம், தூய்மைப் பணிகள், ஏழை எளியோருக்கு நல உதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையில் உள்ள கன்னி விநாயகா் கோயிலில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். அணியின் மாநில துணைத் தலைவா் சுவைதாா் தலைமையில் நடைபெற்ற பணியில், முன்னாள் மாவட்டத் தலைவா் பால்ராஜ், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.