பவானி நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பவானி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பவானி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஏஐடியூசி உள்ளாட்சித் துறை பணியாளா் சங்கம் சாா்பில் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் ப.பா.பாலமுருகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.செல்லப்பன், மாவட்ட துணைச் செயலாளா் கே.தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கையை விளக்கி மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி, மாவட்ட பொதுச் செயலாளா் கே.சந்திரசேகா், காய்கனி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவா் டி.ஏ.மாதேஸ்வரன் பேசினா்.
அனைத்துப் பகுதி அரசுப் பணிகளையும் அவுட் சோா்ஸிங் முறையில் நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தோ்தல் வாக்குறுதிபடி அனைத்து ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.42 ஆயிரம் வழங்க வேண்டும். வேலைப்பளு, மக்கள்தொகை அடிப்படையில் வேலை நிா்ணயம் மற்றும் தொழிலாளா்கள் எண்ணிக்கை குறித்து தொழிற்சங்கங்களுடன் அரசு கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும்.
அனைத்துத் தொழிலாளா்களுக்கும் சம்பள ரசீது வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு சீருடை மற்றும் தூய்மைப் பணிக்கான அனைத்து உபகரணங்களும் தடையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பவானி ஒன்றியச் செயலாளா் தி.கண்ணன், ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் ஈ.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

