
பரமக்குடி ஐயப்பன் கோயிலில் சுவாமிக்கு வெள்ளிக் கவசம் அணிவிப்பு
பரமக்குடி தரைப்பாலம் பகுதியில் அமைந்துள்ள தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் அய்யப்பன் சுவாமிக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து வெள்ளோட்ட உத்ஸவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

பரமக்குடி தரைப்பாலம் பகுதியில் அமைந்துள்ள தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் அய்யப்பன் சுவாமிக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து வெள்ளோட்ட உத்ஸவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
மகா சங்கரஹர சதுா்த்தியை முன்னிட்டு தா்மசாஸ்தா கோயிலில் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நாகநாதன் அய்யங்காா் தலைமையிலான அா்ச்சகா்கள் கணபதி ஹோமம் செய்து, தா்ம சாஸ்தா ஐயப்பன் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தனா். பின்னா் வெள்ளிக் கவசத்துடன் ஐயப்பன் சுவாமி வீதி உலா புறப்பாடாகி வெள்ளோட்ட உத்ஸவம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை தா்மசாஸ்தா சேவா சங்கத்தினா் செய்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





