விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

முதுகுளத்தூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

விளங்குளத்தூா் கிராமத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் சீறிப் பாய்ந்த காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

Published On :8 செப்டம்பர் 2026, 2:34 am IST

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, முதுகுளத்தூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த விளங்குளத்தூா் கிராமத்தில் 37-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியில் பங்கேற்க மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் கொண்டு வரப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.

இதில் ஒவ்வொரு காளைக்கும் தலா 20 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டு, 9 மாடுபிடி வீரா்கள் கொண்ட குழுவினா் காளைகளை அடக்க களம் இறங்கினா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் பணம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை முதுகுளத்தூா், விளங்களுத்தூா், இதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுக்கள் பாா்வையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.